என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாரிஸ் தேவாலய தீவிபத்து
நீங்கள் தேடியது "பாரிஸ் தேவாலய தீவிபத்து"
இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். #FranceFire #NotreDameCathedral
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயத்தில், கடந்த 15-ந் தேதி பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே-டேம் தேவாலயத்தின் பெரும் பகுதி உருக்குலைந்து போய்விட்டது.
பிரான்சின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படும் இந்த தேவாலயம், ஏற்கனவே இருந்ததை விட அதிக அழகுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என அதிபர் மெக்ரான் உறுதி பூண்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.200) பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். பாரீசில் உள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 அமெரிக்க டாலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் அவள் அனுப்பினாள்.
அந்த கடிதத்தில் அவள், “நோட்ரே-டேம் தேவாலயத்தின் தீ விபத்து குறித்து, ரேடியோ மூலம் அறிந்து மனமுடைந்து போனேன். என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பினேன். எனக்கு தெரியும் இது பெரிய தொகை இல்லை. ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு சின்ன தொகையும் தேவாலயத்தை சீக்கிரமாக சீரமைக்க உதவும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தாள். #FranceFire #NotreDameCathedral
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயத்தில், கடந்த 15-ந் தேதி பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே-டேம் தேவாலயத்தின் பெரும் பகுதி உருக்குலைந்து போய்விட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.200) பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். பாரீசில் உள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 அமெரிக்க டாலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் அவள் அனுப்பினாள்.
அந்த கடிதத்தில் அவள், “நோட்ரே-டேம் தேவாலயத்தின் தீ விபத்து குறித்து, ரேடியோ மூலம் அறிந்து மனமுடைந்து போனேன். என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பினேன். எனக்கு தெரியும் இது பெரிய தொகை இல்லை. ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு சின்ன தொகையும் தேவாலயத்தை சீக்கிரமாக சீரமைக்க உதவும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தாள். #FranceFire #NotreDameCathedral
850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார். #NotreDameCathedralFire #NotreDame
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது.
அந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது.
தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது,
இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணி தொடங்கப்படும். தேவாலயத்தை ஏற்கனவே இருந்ததைவிட மிக அழகாக கட்டுவோம். அடுத்த 5 வருடத்திற்குள் தேவாலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். மனித தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிறைய முறை சரிசெய்துள்ளோம். அந்த வகையில் இதையும் விரைந்து சரிசெய்வோம் என்றார்.
இந்த தீவிபத்துக்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், தேவாலயத்தை புதுப்பிப்பதற்கான நிதியும் குவிந்து வருகிறது. #NotreDameCathedralFire #NotreDame
பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது. #FranceFire #NotreDameCathedral
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது.
பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் கோபுரத்தைவிட இந்த தேவாலயத்துக்கு ஓவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள். கத்தோலிக்க மக்கள் புனித வாரத்தை கொண்டாட கடைபிடித்து வருகிற நிலையில், தேவாலயத்தின் சுவரில் ஏற்பட்டிருந்த கீறல்களை சரிசெய்ய, கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் தொடங்கின.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தேவாலயத்தில் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
மிகவும் ஆக்ரோஷமாக பற்றி எரிந்த தீயால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது.
இதையடுத்து, நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு மூச்சுடன் இறங்கினர்.
தீ விபத்து ஏற்பட்ட தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேவாலயத்தில் இருந்து கிளம்பிய தீ பிழம்புகளை வேதனையுடன் பார்த்தனர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் சிலர் தேவாலயத்தில் உள்ள ஏராளமான புராதன கலைப்பொருட்கள் காப்பாற்றப்பட வேண்டுமென இறை பாடல்களை பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து தெரியவந்ததும், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அங்கு மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்ட அவர் இது பற்றி கூறுகையில் “இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணி தொடங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
நோட்ரே-டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தனர்.
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில், “14-ம் நூற்றாண்டு முதல், உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே-டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன” என குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு தேவாலயத்தில் எரிந்த தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை.
தேவாலயத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் காரணமாக தீப்பிடித்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் உண்மையான காரணத்தை கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தேவலாயத்தை புனரமைப்பதற்காக நிதி குவிய தொடங்கி உள்ளது. பிரான்சை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் மட்டும் 300 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரத்து 360 கோடி) வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #FranceFire #NotreDameCathedral

பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் கூறியுள்ளார். #FranceFire #NotreDameCathedral
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், '14ம் நூற்றாண்டு முதல், உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன' என பதிவிட்டுள்ளார்.
இதேப்போல் ஐநா பொது சபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா தனது டுவிட்டர் பக்கத்தில், 'நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் தீயில் எரிந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள் கதீட்ரல் தேவாலயம் ஒன்றாகும். கடந்த 1991ம் ஆண்டு ஐநாவில் கதீட்ரல் தேவாலயம் , உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்பேன்' என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து யுனெஸ்கோ தலைவரான ஆட்ரி அசூலே கூறுகையில், ' கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உள்ளுணர்வை ஆழமாக பாதித்துள்ளது. எங்கள் நிறுவனம் இந்த சூழலை தற்போது கண்காணித்து வருகின்றது. பாரிஸ் மக்களுடன் யுனெஸ்கோ எப்போதும் உறுதுணையாக நிற்கும். விலை மதிப்பில்லாத இந்த பாரம்பரியத்தினை மீட்க நாங்கள் என்றும் துணை நிற்போம்' என கூறினார். #FranceFire #NotreDameCathedral

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.
இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், '14ம் நூற்றாண்டு முதல், உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன' என பதிவிட்டுள்ளார்.
இதேப்போல் ஐநா பொது சபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா தனது டுவிட்டர் பக்கத்தில், 'நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் தீயில் எரிந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள் கதீட்ரல் தேவாலயம் ஒன்றாகும். கடந்த 1991ம் ஆண்டு ஐநாவில் கதீட்ரல் தேவாலயம் , உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்பேன்' என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து யுனெஸ்கோ தலைவரான ஆட்ரி அசூலே கூறுகையில், ' கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உள்ளுணர்வை ஆழமாக பாதித்துள்ளது. எங்கள் நிறுவனம் இந்த சூழலை தற்போது கண்காணித்து வருகின்றது. பாரிஸ் மக்களுடன் யுனெஸ்கோ எப்போதும் உறுதுணையாக நிற்கும். விலை மதிப்பில்லாத இந்த பாரம்பரியத்தினை மீட்க நாங்கள் என்றும் துணை நிற்போம்' என கூறினார். #FranceFire #NotreDameCathedral
×

X